பூச்சிகள் சிறுநீர் கழிக்கும் என்பதே பலருக்கு தெரியாது. அதிலும், சில பூச்சிகள் வினோதமான முறையில், 'உச்சா' போகின்றன. அண்மையில் அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒரு பூச்சியினத்தைக் கண்டுபிடித்துள்ளது.
அது, சிறுநீர் கழிப்பது, பின்பகுதியிலிருந்து. அப்பகுதியில் ஒரு ஒண்டிவில் போன்ற அமைப்பு உள்ளது. அதன் வழியே சொட்டுசொட்டாக வெளியே வரும் சிறுநீரை, ஒண்டிவில் போன்ற அமைப்பு அதிக விசை கொண்டு வீசி எறிகிறது. அதன் விசையை ஜார்ஜியா ஆராய்ச்சியாளர்கள் அளந்தும் பார்த்துள்ளனர். எவ்வளவு தெரியுமா? 40 ஜி., மிகவேகமாக நிகழும் இந்த வீச்சுக்களை, ஸ்லோமோஷனில் படம் பிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
இந்த கண்டுபிடிப்பை மேலும் ஆராய்ச்சி செய்தால், நீர் அல்லது ஈரத்தை வெளியேற்ற வேண்டிய தேவையுள்ள கருவிகள் அல்லது அமைப்புகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.