அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய நபரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள ரஜதால் செக்போஸ்டில், நள்ளிரவு எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஊடுருவ முயன்ற நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement