ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய நார்ட் 3 மாடலை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக ஒன்பிளஸ் உள்ளது. ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட ப்ரீமியம் பிராண்டுகளுக்கு நிகராக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வபோது சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும் விற்பனைக்கு களமிறக்கி வருகிறது. குறிப்பாக இதன் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புதிய நார்ட் 3 மாடல் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
![]()
|
சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் வி2 (OnePlus Ace 2V)
ஸ்மார்ட்போன் தான் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் 3 ஆக அறிமுகமாக உள்ளது. அதே, 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ்ரேட் உடனான 6.74-இன்ச் அமோஎல்இடி(AMOLED) டிஸ்ப்ளே கொண்டிருக்கும். 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட டைமன்சிட்டி 9000 (Dimensity 9000) சிப்செட் மூலம் இயக்கப்படும்.
![]()
|
அதேபோல், ஒன்பிளஸ் மாடல் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. கேமராவை பொறுத்தவரை ஒன்பிளஸ் நார்ட் 3-இல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் ஓஐஎஸ் சப்போர்ட்டுடன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு 16எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
![]()
|
மேலும் இதில், ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மார்கெட்டில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ரூ.27,200 க்கு அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 2வி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய மதிப்பின்படி சுமார் ட்டுள்ளது. ஆக இதே போன்ற விலை நிர்ணயத்தை ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம்.