நெய்வேலி : நெய்வேலியில் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கார்த்திகேயன், கிழக்கு மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, வடக்கு மாவட்ட அமைப்பு தலைவர் அரிராமன் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன் வரவேற்றார்.
மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி சண்முகம், மாநில அமைப்பு தலைவர் தாமரைக்கண்ணன் கூட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேசினர். வரும் லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில், ் கிளைகள் இல்லாத பகுதிகளில் கட்டமைப்பை உருவாக்குவது. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்புகளை கட்டமைப்பது, புதிய நிர்வாகிகளை பொறுப்பில் அமர்த்தி, கட்சி பணிகளை வலுப்படுத்துவது, என்.எல்.சி., நில எடுப்பு விவகாரத்தில் பகிரங்கமாக என்.எல்.சி.யின் முகவர்களாக செயல்படும் அமைச்சர்களை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் சசிக்குமார், மாநில நிர்வாகிகள் வேங்கை சேகர், முத்து வைத்தி, தருமலிங்கம், சக்கரவர்த்தி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.