பொள்ளாச்சி: பொள்ளாச்சி குமரன் நகர், ஊத்துக்காடு ரோடு, வடுகபாளையம் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது.அதில், வடுகபாளையம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் இன்று, 10ம் தேதி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக, இன்று மாலை, 6:00 மணியில் இருந்து நாளை, 11ம் தேதி காலை, 6:00 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, மாற்று வழித்தடமான, கோவை ரோடு, பி.கே.பி., பள்ளி ரோடு வழித்தடத்தில், வடுகபாளையம் செல்லலாம். இத்தகவலை தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.