விபத்து அபாயம்
வில்லியனுார் பாலத்தில் நடுவில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு பட்டை துாக்கி கொண்டுள்ளதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
விஜயகுமார், தனத்துமேடு.
சாலையை சீரமைக்க வேண்டும்
மடுகரை - கடலுாசர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.
பாலகுரு, நெல்லித்தோப்பு.
நாய் தொல்லையால் அவதி
நெல்லித்தோப்பு ,வேல்முருகன் நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், நடந்து செல்லவே அச்சமாக உள்ளது.
உஷாராணி, நெல்லித்தோப்பு.
போக்குவரத்துக்கு இடையூறு
உப்பளம் தமிழ்தாய் நகர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மண் மற்றும் ஜல்லிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், முதலியார்பேட்டை.