புதுடில்லி: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி, அவரது சகோதரி உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ரயில்வேயில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்ற மோசடி செய்ததாக பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பீஹார் மற்றும் டில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லியில் உள்ள பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சகோதரி ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ், ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ சையத் அபு டோஜ்னாவுக்கு சொந்தமான இடங்கள் என டில்லி, ராஞ்சி, என்சிஆர் மற்றும் மும்பை என 15 இடங்களில் சோதனை நடந்தது.