விழுப்புரம் : இளம்பெண்ணை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த மழவராயநல்லுாரை சேர்ந்தவர் புகழேந்தி மனைவி சுகன்யா, 23; இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு திருமணமாகி இரண்டு மாதம் மட்டுமே, குடும்பம் நடத்தினர்.
இதையடுத்து, விழுப்புரம் கே.கே., ரோட்டில் உள்ள தனது தந்தை வைத்தி வீட்டில் சுகன்யா வசித்து வந்தார். அங்கிருந்து கடந்த 8ம் தேதி முதல் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.