காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா 14 நாட்கள் நடக்கும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா வரும் 26ம் தேதி காலை, 4:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். ஏப்., 8ம் தேதி இரவு, பொன் விமானத்தில் திருமுறை உற்சவத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.