காஞ்சிபுரம்:இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் காஞ்சிபுரம் மாவட்ட கிளை மற்றும் காஞ்சிபுரம் ராம்ஸ் கண் மருத்துவமனை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் ஓரிக்கை மத்திய தொழிற்கூடத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
இதில், காஞ்சிபுரம்பேருந்து நிலையம், ஓரிக்கை பணிமனையை சேர்ந்தடிரைவர்கள், கண்டக்டர்கள், டெக்னீஷியர், அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் என, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் ராம்குமார்,டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருந்து மாத்திரை வழங்கினர்.
முகாமில், காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி, தொழில் நுட்ப துணை மேலாளர்சீனிவாசன், துணை மேலாளர் ஜெயபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாம் ஏற்பாட்டை கிளை மேலாளர் கருணாகரன் செய்திருந்தார்.