வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சிறுவயதில் எனது தந்தையால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டேன் என டில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
டில்லி யில் விருது வழங்கும் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகளிர் ஆணைய தலைவரான சுவாதி மாலிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
நான் சிறுமியாக இருந்த போது எனது தந்தை என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். என்னை அடித்து, துன்புறுத்துவார். தலைமுடியை பிடித்து சுவரில் கொடூரமாக தாக்குவார். வெளியே சென்று எப்போதெல்லாம் வீட்டுக்கு வருவாரோ, அப்போது நான் பயந்து படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்வேன் என்றார்.
![]()
|
சமீபத்தில் மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்ற நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் என் தந்தை எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் துவங்கினார் என்றார். தற்போது டில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலும் தான் பெற்ற தந்தை மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement