வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிவகங்கை: எழுதாத பேனாவிற்கு ரூ.82 கோடியில் நினைவு சின்னம் எதற்கு.அரசியலிலும் சினிமாவிலும் சம்பாதிக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க., வினர் கில்லாடிகள் என அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கூறினார்.
![]()
|
சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:தொடண்டன்தான் ஒரு கட்சியின் உயிர் மூச்சு. அ.தி.மு.க., தொடண்டர்களால் உருவான கட்சி அரசியலிலும் சம்பாதிக்கிறார்கள் சினிமாவிலும் சம்பாதிக்கிறார்கள்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. எழுதாத பேனாவிற்கு ரூ.82 கோடியில் நினைவு சின்னம் எதற்கு.திமுக ஆட்சி பொறுப்பபேற்றதில் இருந்து அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது.
![]()
|
தமிழ்நாட்டில் சம்பாதிப்பதற்காகவே உருவானகுடும்பம் தி.மு.க.,அ.தி.மு.க.,உழைப்பால் உருவான கட்சி. அ.திமு.க.,வில் உழைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு வர முடியும். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் தி.மு.க.,வினர் கில்லாடிகள் ஒரு கட்சிக்கு தொடண்டன் தான் முக்கியம். தலைவர் முக்கியமல்ல. உதயநிதிக்கு முடி சூட்டியதே ஸ்டாலின் அரசின் சாதனை . ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டு திமுக ஆட்சியை தாங்கி பிடிக்கின்றன. இனிமேலாவது உண்மையை எழுதுங்கள் .இவ்வாறு பழனிசாமி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement