வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : புதுடில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரனார். அவர் மீண்டும் 16-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், 2021ல் மதுபான கொள்கை மாற்றப்பட்டது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக , சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
![]()
|
இந்த வழக்கில் தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் பெயர் இடம் பெற்றது. நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப் பட்டது. இதையடுத்து புதுடில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.