சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சேப்பியன்ஸ் மருத்துவ அறக்கட்டளை 1997ல் துவங்கப்பட்டது. அதன் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் ரஜினி, உப்பு அதிகம் சேர்ப்பதால் உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என பேசி ஆச்சர்யப்படுத்தினார்.
சேப்பியன்ஸ் மருத்துவ அறக்கட்டளையின் தலைவராக பிரபல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராஜன் ரவிச்சந்திரன் உள்ளார். இவர் தான் தனக்கு அமெரிக்காவின் ரோச்ஸ்டரில் உள்ள மேயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர் என ரஜினி கூறினார். சென்னை ராயப்பேட்டையில் இந்த அறக்கட்டளையின் வெள்ளி விழா கொண்டாட்டம் சனிக்கிழமை (மார்ச் 11) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர் எஸ்.என்.நரசிங்கன், கிரேசி கிரியேஷன்ஸின் மாது பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் உடல்நலம் பேணுவது குறித்து ரஜினி பேசுகையில், உப்பு பற்றி குறிப்பிட்டதாவது: நிறைய மதுபானம் குடித்தால் கல்லீரல் பாதிக்கும். நிறைய சிகரெட் புகைத்தால் நுரையீரல் பாதிக்கும். வறுத்த, பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தை பாதிக்கும். ஆனால் உப்பு அதிகம் ஆனால் அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கும். மருத்துவர் ரவிச்சந்திரன் சொன்னது போல், சாப்பாட்டில் காரம், மசாலா, எண்ணெய், அது, இது என எது போட்டாலும் உப்பு கொஞ்சம் அதிகம் போட்டுவிட்டால் எல்லாம் போய்விடும், உப்பு மட்டும் தான் தெரியும்.
![]()
|