அமெரிக்காவின் எஸ்.வி.பி., திவாலாகிவிட்டது. சிலிக்கான் வேலி வங்கி சுருக்கமாக எஸ்.வி.பி., என அறியப்படுகிறது. அதே போல் மும்பையை தலைமையிடமாக கொண்டு எஸ்.வி.சி., வங்கி இயங்குகிறது. சிலர் எஸ்.வி.சி., வங்கி தான் திவாலாகிவிட்டது என கிளப்பிவிட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது அந்த வங்கி, 'நான் அவன் இல்லை' என்கிற ரீதியில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சிலிக்கான் வேலி வங்கி நிதி நெருக்கடியால் வீழ்ச்சியடைந்தது. இந்த வங்கி தற்போது அமெரிக்க பெடரல் இன்சூரன்ஸ் கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. அவர்கள் வங்கிச் சொத்துக்களை கைப்பற்றி அதனை பணமாக்க உள்ளது. இந்த வங்கி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக கடன் கொடுத்துள்ளது. எனவே பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வங்கியில் கணக்குகளை பராமரிக்கின்றன. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அதில் அடக்கம். இந்த வங்கியின் வீழ்ச்சி ஐடி துறையையும் பாதிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இதன் தாக்கம் திங்களன்று பங்குச்சந்தையில் எதிரொலிக்கக் கூடும்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த எஸ்.வி.சி., வங்கியும் இந்த பிரச்னையில் இழுத்து விடப்பட்டுள்ளது. அது நிதிசார்ந்த பிரச்னை இல்லை. இரு வங்கிகளுக்கும் இருக்கும் ஒத்துப்போகக் கூடிய பெயர் மற்றும் லோகோ நிறம் ஆகியவை இப்பிரச்னைக்கு காரணம். இதனை வைத்துக்கொண்டு, மும்பையை தலைமையிடமாக கொண்ட எஸ்.வி.சி., எனும் கூட்டுறவு வங்கி தான் திவாலாகிவிட்டதாக புரளி கிளப்பி விட்டுள்ளனர்.
![]()
|