திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த, படூர் ஊராட்சியில், மாடித்தோட்டம், காளான் வளர்ப்பு, மூலிகை செடி வளர்ப்பு, பெண்களுக்கு சுய தொழில் மற்றும் ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்ட பணி செயல்பாடு அறிவதற்காக, மஹாராஷ்டிரா ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகர் நேற்று படூர் வந்து, பார்வையிட்டனர்.
மேற்கண்ட பணிகள் குறித்து படூர் ஊராட்சி தலைவர் தாரா எடுத்துரைத்தார்.
இங்குள்ள மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் சுய தொழில் செய்து வருவாய் ஈட்டுவது, மாடி தோட்டம் வாயிலாக கிடைக்கும் வருவாய், 'கொரோனா' காலத்தில் மாடி தோட்டத்தில் வளர்த்த மூலிகை செடிகளால், இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பயன் குறித்து, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
மஹாராஷ்டிராவில் இருந்து வந்த அதிகாரிகள், தங்களது மொபைல்போனில் இவற்றை படம் பிடித்தனர்.
இதேபோல், மஹாராஷ்டிராவில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.