ராமநாதபுரம்: பரமக்குடி இறந்த போலீஸ்காரர் பாரதிதாசன் குடும்பத்திற்கு, அனைத்து மாவட்ட காக்கும் கரங்கள்2010 பேட்ஜ் சார்பில், ரூ.15லட்சத்து 21ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
பரமக்குடி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தபோது பாரதிதாசன் நுரையீரலில் ஏற்பட்ட நீர்கட்டி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் 2022 டிசம்பரில் தனியார்மருத்துவமனையில் இறந்தார்.
அனைத்து மாவட்ட காக்கும் கரங்கள் 2010 பேட்ஜ் சார்பில், பாரதிதாசன் குடும்பத்தினருக்கு ராமநாதபுரத்தில் எஸ்.பி., தங்கதுரை ரூ.15 லட்சத்து21 ஆயிரத்து 210 நிதியுதவியை வழங்கினார்.
இன்ஸ்பெக்டர் சேதுராம பாண்டியன், காக்கும்கரங்கள் ராமநாதபுரம் மாவட்ட 2010 பேட்ஜ் போலீசார் பங்கேற்றனர்.