முதுகுளத்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக, முதுகுளத்துார்அருகே கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் உள்ள பயணியர் நிழற்குடை மராமத்துபணி செய்து புதுப்பிக்கப்பட்டது.
முதுகுளத்துார் அருகே கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகிண்டி, கீழத்தூவல், மேலத்தூவல் கிருஷ்ணாபுரம், மைக்கேல்பட்டிணம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக முதுகுளத்தூர், பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
சுகாதார நிலையம் முன் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. பஸ்சிற்காக காத்திருக்கும் நோயாளிகள், பொதுமக்கள் அச்சத்துடன் மரத்தடி நிழலில் காத்திருந்து பயணம் செய்து வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாகஒன்றிய கவுன்சிலர் லட்சுமி பரிந்துரையின் பெயரில் பொது நிதியில் இருந்து ரூ. 1லட்சத்து 7 ஆயிரத்தில் நிழற்குடை மராமத்துபணி செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.