மேட்டுப்பாளையம்:காரமடை அருகேயுள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, நடத்தி வருகிறது. இத்தேர்வில் தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கலந்து கொள்ள தகுதியானவர்கள். எட்டாம் வகுப்பு பாடப் பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நடந்த தேர்வில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில் மாவட்ட முழுவதும், அதிக மதிப்பெண்கள் பெறும், 100 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
இத்தேர்வில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து, 20 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, 13 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை, அரசு சார்பில் வழங்கப்படும்.
ஊரக திறனாய்வு தேர்வில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற, 100 மாணவர்களில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, ஆஷிகா, கிருத்திஷ், பூர்னேஷ், ரிஷிய பிரியங்கா, கிஷோர், தாரிகா, சுபாஷ், சுகன், கார்த்திக், ஜான்சிராணி, சவுமியா, சஷ்மிதா, பாவனா, பிரதீபா ஆகிய, 13 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
இதில், இப்பள்ளியை சேர்ந்த ஆஷிகா என்ற மாணவி, 87 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமதாஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.