கோவில்பாளையம்;கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த 18 வயது மாணவி, கோவில்பாளையம் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 7ம் தேதி தங்கி இருந்த கல்லூரி விடுதியில் இருந்து மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மொபைல் நடமாட்டத்தை கண்காணித்த போது விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மாணவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவில்பாளையம் போலீசார் அங்கு சென்று விருதுநகர் போலீசாரின் ஒத்துழைப்போடு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திய கார் டிரைவரான அதே பகுதியைச் சேர்ந்த ஞான பிரகாஷ், 27. என்பவரை கைது செய்து கோவில்பாளையம் அழைத்து வந்தனர்.
போக்சோவில் வழக்கு பதிவு செய்து கோவை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.