2023ஆம் ஆண்டுக்கான 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல திரைத்துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இவ்விழாவில் அணிந்த கருப்பு கவுன் பேஷன் பிரியர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
![]()
|
தெலுங்கு திரையுலகின் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களது கருப்பு வெல்வெட் டிசைனட் கோட் வைரலாகி உள்ளது.
![]()
|
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி ஓடிடி பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற 'எலெஃபென்ட் விஸ்பர்ஸ்' எனும் யானைகள் மற்றும் பாகன்கள் குறித்த இயற்கை ஆவணப் படம் அதிக வரவேற்பு பெற்றது. இதற்காக இந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
![]()
|
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இன்று இரவு மேலும் பல விருதுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் 2023 ஆஸ்கர் விருது விழா டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.