சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

நீங்கள் வேலை செய்யும் இடம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ்

Added : மார் 13, 2023 | |
Advertisement
நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலோ அல்லது தொழிலாளர்களில் ஒருவராகவோ இருந்தால், உங்களைச் சுற்றி ஒரு ஆனந்தமான பணியிடத்தை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதை செய்வதற்காக சத்குருவிடமிருந்து சில குறிப்புகள் இதோ...1. கடின உழைப்பு வேண்டாம்.சத்குரு:குழந்தைப் பருவத்திலிருந்தே, சந்தோஷமாக படி என்றோ, ஆனந்தமாக வேலை செய் என்றோ யாரும் நம்மிடம்
நீங்கள் வேலை செய்யும் இடம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ்

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலோ அல்லது தொழிலாளர்களில் ஒருவராகவோ இருந்தால், உங்களைச் சுற்றி ஒரு ஆனந்தமான பணியிடத்தை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதை செய்வதற்காக சத்குருவிடமிருந்து சில குறிப்புகள் இதோ...1. கடின உழைப்பு வேண்டாம்.


சத்குரு:
குழந்தைப் பருவத்திலிருந்தே, சந்தோஷமாக படி என்றோ, ஆனந்தமாக வேலை செய் என்றோ யாரும் நம்மிடம் சொல்லவில்லை. மக்கள் எப்பொழுதும் நம்மிடம் "படிக்கும் பொழுது நன்றாக படி, வேலை செய்யும் பொழுது கடினமாக உழைத்து செய்" என்றே சொல்லியிருக்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் கடினமாக செய்துவிட்டு, பின்னர், வாழ்க்கை எளிதாக இல்லை என்று வருத்தத்துடன் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

அகங்காரத் தன்மையானது, எல்லாவற்றையும் கடினமாக செய்ய விரும்புகிறது, ஏனெனில், மற்றவரைவிட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்பதே அதன் ஒரே கவலை. இப்படி வாழ்வது துரதிருஷ்டவசமானது. இதுவே முழு முயற்சி ஆகும் பொழுது, மக்கள் இயல்பாகவே எல்லாவற்றையும் கஷ்டமாக செய்வதின் மூலம் மனநிறைவு அடைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாக செயல்களை செய்தால், தாங்கள் எதுவும் செய்யவில்லை போன்று உணர்கிறார்கள்.

நீங்கள் பல செயல்களை செய்துவிட்டு, எதையும் நீங்கள் செய்யவில்லை போல உணர்வது அற்புதமான ஒன்றுதானே? அப்படிதான் இருக்க வேண்டும். நீங்கள் இருபத்திநான்கு மணிநேரம் வேலை செய்தாலும், ஒன்றுமே செய்யவில்லை என்று உணர்ந்தீர்கள் என்றால், நீங்கள் எந்த சுமையையும் உங்கள்மீது எடுத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். அப்படி உங்கள் தலைமீது எடுத்துக்கொண்டால், உங்களுடைய திறமைகள் ஒருபோதும் முழுமையாக வெளிப்படாது. மேலும், நீங்கள், இரத்தஅழுத்தம், நீரிழிவு மற்றும் அல்சரை உங்களுக்கு வரவழைத்து கொள்வீர்கள்.


2. போட்டிக்கு அப்பாற்பட்டு செல்லுதல்.


சத்குரு:
மனிதனுடய உண்மையான திறமைகள் போட்டியில் வெளிப்படாது. நீங்கள் யாரோ ஒருவருடன் போட்டியிடும்பொது, அவரைவிட ஒருபடி முன்னே செல்ல வெண்டும் என்று மட்டுமே நினைக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்களுக்குள் மறைந்துள்ள உண்மையான ஆற்றலை பற்றி நினைப்பதில்லை. மனிதனுடய உண்மையான திறமைகள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதுதான் முழுமையாக வெளிப்படும். உள்ளுக்குள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தால், உங்கள் உடல், மனம் சிறப்பாக வேலை செய்யும். பொதுவாக மக்களை தளர்வாக இருக்க சொன்னால், சோம்பேறி ஆகிவிடுகிறார்கள். தீவிரமாக இருக்க சொன்னால் இறுக்கமாகிவிடுகிறார்கள். இதன் வித்தியாசத்தை உணரமுடிகிறதா? நீங்கள் தளர்வாகவும், தீவிரமாகவும் இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் தளர்வாகவும், தீவிரமாகவும் இருந்தால், உங்களுடைய எல்லா திறமைகளையும் முழுமையாக பயன்படுத்த முடியும்.


3. தன்னார்வ கலையை கற்றுக்கொள்ளுங்கள்.


சத்குரு:

நீங்கள் தானாக முன்வந்து ஒரு வேலையை மேற்கொள்ளும் போது அது ஒரு அர்ப்பணிப்பாகிறது. ஆனால், அதே வேலையை வீட்டிலோ, பணியிடத்திலோ செய்யும்பொழுது அசிங்கமான செயலாக இருக்கிறது. அதே வேலைதான், அதே ஆள்தான். ஆனால், துன்பமாக செய்யலாமா அல்லது ஆனந்ததமாக செய்யலாமா என்ற தேர்வு உங்கள் கையில்தான் இருக்கிறது. எனவே வேலையிடத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது ஏன் ஒரு அர்ப்பணிப்பாக செய்யகூடாது? எது உங்களை தடுக்கிறது?

நீங்கள் எப்போதும் தன்னார்வத்துடன் இருக்கவேண்டும். உங்கள் வாழ்க்கையை விருப்பத்துடன் நடத்திக்கொள்வதுதான் தன்னார்வம். இப்போது, நீங்கள், “நான் ஒரு தன்னார்வத்தொண்டர்" என்றால், அதற்கு, "நான் என்ன செய்கிறேனோ அதை விரும்பி செய்கிறேன்" என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையை விருப்பத்துடன் நடத்திக் கொள்வதா விருப்பமில்லாமல் நடத்திக்கொள்வதா என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள். விரும்பிச் செய்தால் வாழ்க்கை பேரின்பமாகவும், சொர்க்கமாகவும் மாறும். விருப்பமில்லாமல் இருந்தால் நரகமாகும். தன்னார்வத்துடன் இருப்பது என்பது ஈஷா யோகா வகுப்பில் பாத்திரங்களை கழுவுவதிலோ, காய்கறிகளை வெட்டுவதிலோ இல்லை. அது, வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும், ஒவ்வொரு கணத்திலும் எப்படி விருப்பத்துடன் நட்த்திக்கொள்வது என்பதில் உள்ளது. ஏனென்றால், விருப்பமில்லாமல் இருந்தால், உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அழகான விஷயம்கூட எரிச்சலாக இருக்கும்.


4. உங்களுடைய சக ஊழியர்களிடமிருந்து சிறந்ததை பெறுங்கள்.


சத்குரு:

நீங்கள் ஒரு தொழில் செய்தாலோ, குடும்பத்தில் இருந்தாலோ, வேறு என்ன செய்தாலும், உங்களுக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால், உங்களை சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒருவகையில் உங்கள் மீது அன்பு கொண்டிருந்தால்தான் அந்த வேலை சிறப்பாக நடக்கும். ஆனால், அவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்துவதற்கு முன், அவர்கள் எப்படிபட்டவர்களாக இருந்தாலும், நீங்கள் அவர்களிடம் அன்பு கொள்ள வேண்டும். அவர்கள் உங்களை நேசித்தால்தான், அவர்களிடமிருந்து சிறப்பானவற்றை நீங்கள் பெறமுடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X