
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஒ.பி.,வைஷ்ணவ மகளிர் கல்லுாரியின் ஊடகத்துறை மாணவியர் எடுத்த முன்னுாறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் தொகுத்து கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லுாரியின் ஊடகத்துறையினர் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு வருடாவருடம் கண்காட்சி நடத்துவது வழக்கம் இது பதினொராவது வருட கண்காட்சியாகும்.

துறை மாணவியர்கள் சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் சுற்றி படங்கள் எடுத்துள்ளனர் சில மாணவியர் துபாய்,துருக்கி உள்ளீட்ட வெளிநாடுகளிலும் சென்று படம் எடுத்துள்ளனர்.
இப்படி கிட்டத்தட்ட மாணவியர் எடுத்த ஐயாயிரத்திற்கும் அதிகமான படங்களை பிரபல புகைப்பட நிபுணர் பூச்சி வெங்கட் தலைமையிலானவர்கள் ஆய்வு செய்து அதில் இருந்து 300 படங்களை தேர்வு செய்து கண்காட்சியில் வைத்துள்ளனர்

படங்கள அனைத்தும் அருமையாக உள்ளது தொழில் முறை புகைப்படக்கலைஞர்களுக்கு சவால்விடும் திறமையை கொண்டுள்ளது.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்களில் 17 படங்கள் மிகச்சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழுடன் பரிசும் வழங்கப்படுகிறது,பார்வையாளர்கள் தாங்கள் விரும்பிய படங்களை இங்கு விலைக்கும் வாங்கிக் கொள்ளலாம்.

புகைப்பட கண்காட்சி 14 ந்தேதியான நாளையுடன் நிறைவு பெறுகிறது. அனுமதி இலவசம் பார்வையாளர் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை.
-எல்.முருகராஜ்