95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கிறது. இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர்., படத்தில் வரும் 'நாட்டு நாட்டு' பாடலும், வளர்ப்பு யானைகள் மற்றும் பாகன்களுக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பு குறித்த 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்'' என்ற ஆவண குறும்படமும், 'ஆஸ்கர்' விருதை தட்டிச் சென்றுள்ளது.
![]()
|
ஆஸ்கர் விருதை அறிவித்து தொகுத்து வழங்கும் 16 தொகுப்பாளர்கள் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனும் ஒருவராக இடம்பெற்றுள்ளார். விருது வழங்கும் போது கைகளுக்கு கிளவுஸ், கருப்பு நிற கவுன் என பேஷன் உடையில் தீபிகா அசத்தினார். தொடர்ந்து நடந்த விருந்தில் பிங்க் நிற கவுன் அணிந்து அசத்தலாக வலம் வந்தார்.
![]()
|
அதில், புஸு புஸு வென்ற பிங்க் நிற வெல்வெட் கவுன், முழங்கை வரை கருப்பு நிற லெதர் கிளவுஸ், அதே கருப்பு நிறத்தில் கால்களில் மெல்லிய பேஷன் பிஷ்நெட் மெஸ் பேன்ட், ஹை ஹீல் செப்பல் என ஸ்டைலாக உலா வந்தார். ஷோசியல் மீடியாவில், இந்த பிங்க் நிற கவுனில் அசத்தல் போஸ்களில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் பதிவிட்ட ஐந்து மணி நேரத்திலேயே 11 லட்சத்து 23 ஆயிரம் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement