பல்வேறு சிறப்பம்சங்களுடன் கொண்ட பிரத்யேகமாக பெண்களுக்கென, பிளாசம் சேமிப்பு கணக்கை, சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.
சூரியோதய் எஸ்.எஃப்.பி வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிளாசம் மகளிர் சேமிப்பு கணக்கில் மாதம் ஒருமுறை வட்டி வரவு வைக்கப்படும். சேமிப்பு கணக்கிற்கு ஒவ்வொரு ஆண்டும் 7 சதவீத வட்டி வழங்கப்படும். சேமிப்பு கணக்குடன், ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு வழங்கப்படும். இதனை பயன்படுத்தி ஆன்லைன் மற்றும் பிற பொருட்கள் ஷாப்பிங்கிற்கு பயன்படுத்தி சிறப்பு சலுகைகளை பெறலாம்.
பிளாசம் சேமிப்பு கணக்கின் நன்மைகள் :
1.தனித்துவமான மற்றும் இலவச ரூபே டெபிட் கார்டு பயன்படுத்தி பெண் வாடிக்கையாளர்கள் பல்வேறு சலுகைகளை பெறலாம்
2. மாதந்தோறும் வட்டி, சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்
3. குழந்தைக்கும் ஒரு சேமிப்பு கணக்கை துவக்கி கொள்ளலாம் ( ஆதித்யா சேமிப்பு கணக்கு)
4. இருசக்கர வாகன லோன் செயலாக்க கட்டணத்தில் சலுகை கிடைக்கும் (*குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும்).
![]()
|
5. தேவையை பொறுத்து வீட்டிற்கே வங்கி சேவை வழங்கப்படும்.
6. டெபிட் கார்டு வகையை பொறுத்து காப்பீடு பொருந்தும்
7. சராசரி மாத இருப்பு ரூ.10,000/- மட்டும்.
8. சினிமா இலவச டிக்கெட் அல்லது ஸ்பா, சலூனுக்கு பயன்படுத்தும் கூப்பன் கிடைக்கும்.
இதுதவிர, சூரியோதய் வங்கி, உஜ்வால், ஆதித்யா, கிளாசிக், சுப்ரீம், ஹெல்த் அண்டு வெல்னெஸ், அடிப்படை சேமிப்பு கணக்கு சேவைகளையும் வழங்குகிறது.