கோவை:குளூக்கோமா வாரத்தையொட்டி, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில், வரும் 18ம் தேதி வரை, இலவச குளூக்கோமா பரிசோதனை செய்யப்படுகிறது.
தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின், மருத்துவ இயக்குனர் மற்றும் குளூக்கோமா பிரிவு ஆலோசகர் சித்ரா கூறியதாவது:
குளூக்கோமா என்பது படிப்படியாக, எந்த அறிகுறியுமின்றி கண் அழுத்தம் அதிகரிப்பதினால், கண்களில் பார்வை இழப்பு ஏற்படுவதாகும்.
40 வயதுக்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள், உயர் கிட்டப்பார்வை, கண்களில் வீக்கம் மற்றும் காயம் பாதிப்பு, ஸ்டீராய்டு உபயோகித்தல், பிறவி கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு, குளூக்கோமா வர அதிக வாய்ப்புள்ளது.
இவர்கள், வழக்கமான கண் பரிசோதனைகளுடன் குளூக்கோமா சோதனையும் மேற்கொள்ள வேண்டும். ஆரம்பநிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம், பார்வை இழப்பை தடுக்கலாம்.
தி ஐ பவுண்டேஷனில் குளூக்கோமா பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு, 94422 17796, 0422 - 4242000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.