கோவை;ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை மற்றும் ராமகிருஷ்ணா கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், 'எஸ்.ஆர். இ.சி., அலுமினி டிராபி 2023'க்கான வாலிபால், ஹாக்கி, ஹேண்ட்பால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 10 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியிட்டனர்.
ஹாக்கி இறுதிப்போட்டியில் சக்தி கல்லுாரி அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் பி.பி.ஜி., கல்லுாரி அணியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தது.
வாலிபால் இறுதிப்போட்டியில் இந்துஸ்தான் கல்லுாரி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.
ஹேண்ட்பால் லீக் சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்து, சக்தி கல்லுாரி அணி முதலிடத்தையும், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன.
பெண்கள் வாலிபால் இறுதிப்போட்டியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, 2-1 என்ற செட் கணக்கில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அணியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் முன்னாள் மாணவர் செல்வராஜ் மற்றும் முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் பெருமாள் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் செய்திருந்தார்.