கோவை:கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் சரிந்திருப்பது, பொதுப்பணித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பற்றி, பொதுப்பணித்துறை மாதம் தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பிப்ரவரி மாதத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மாவட்டத்தில் சராசரி நிலத்தடி நீர் மட்டம் 8.25 மீட்டராக உள்ளது. ஜனவரி மாதத்தில் சராசரி நிலத்தடி நீர் மட்டம் 7.67 மீட்டராக இருந்தது. ஒரு மாத இடைவெளியில், 0.59 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது.
'வரும் நாட்களில் கடுமையான வெயில் இருக்கும் என்பதால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக சரியும் வாய்ப்புள்ளது. கோடைமழையும், தென் மேற்கு பருவமழையும் கை கொடுத்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும்' என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.