திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், மேல்சீசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், கணக்கு ஆசிரியராக, ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், 54, பணிபுரிகிறார்.
இவர், இப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தார்.இது குறித்து, மாணவியின் அக்கா, ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சரவணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, தேடிவருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement