ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்

Updated : அக் 06, 2011 | Added : அக் 06, 2011 | கருத்துகள் (61)
Share
Advertisement
நியூயார்க்: கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். அறிவாளிகளும் சாதனையாளர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய மரணம் அமைந்துள்ளது. 1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன
 Steve Jobs passes away, ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்

நியூயார்க்: கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். அறிவாளிகளும் சாதனையாளர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய மரணம் அமைந்துள்ளது. 1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இதை தனது 21வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கி ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.

எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே. 2003ல் ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.

புதிய வரலாற்றைப் படைத்தது: 2007ல் ஐ‌ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது.

இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஒபாமா: அமெரிக்காவில் புதிய படைப்புகளை உருவாக்கி உலகில் சாதனை படைத்தவர்களில் ஸ்டீவ் ஜாப்ஸூம் ஒருவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தை துவங்கி இந்த உலகிற்கு மகத்தான சேவை செய்து நம்‌மை விட்டு பிரிந்துவிட்டார். மனித வரலாற்றில் அரிய சாதனை ப‌டைத்துள்ளார். மிகவும் அசாதாரணமான ஒரு மனிதரை இந்த உலகம் இழந்துவிட்டது என்றார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்: கம்ப்யூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்தி,உலகையே மாற்றி அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரை இந்த கம்ப்யூட்டர் உலகம் இழந்துவிட்டது என சமூக இணையதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறினார்.

அர்னால்டு இரங்கல்: கலிபோர்னியா மக்களின் கனவை நனவாக்கி தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்.கம்ப்யூட்டர் உலகின் முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் என கலிபோர்னியா மாகாண கவர்னரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்டுஸ்வாஸ்னேக்கர் டுவீட்டர் இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரி்க்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் கடந்த 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார் ஸ்டீவன்பவுல் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் இன்ஜினியராக தனது பள்ளி வாழ்க்கையை துவக்கினார். 300-க்கும் மேற்பட்ட தனது எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார். கடந்த 1977-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27-ம் ஆண்டு முதன்முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார்.அவர் விலகினாலும் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணியை உலகம் மறக்கவில்லை.
Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.MOHAN - ERODE,இந்தியா
08-அக்-201123:12:59 IST Report Abuse
G.MOHAN உண்மையான அறிவு உலக நாயகனை நாம் இழந்து விட்டோம். அவருடய இழப்பு உலக மக்கள் அனைவருக்கும் மா பெரும் இழப்பு .அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை நாம் அனைவரும் தெரிவிப்போம்.
Rate this:
Cancel
Nehruji Velmurugan - Chennai,இந்தியா
08-அக்-201117:54:11 IST Report Abuse
Nehruji Velmurugan bankrupt company-a government vida athigama laabam adaiya seithavar 56, but government-ye bankrupt aga vachavar 86
Rate this:
Cancel
panneerselvam - thajore,இந்தியா
08-அக்-201112:53:15 IST Report Abuse
panneerselvam WE love you...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X