சுப்ரீம்கோர்ட்டில் வாதிட போகிறார் ராஜா - ஆவணங்கள் பல இவர் கைகளால் எழுதியது

Updated : அக் 06, 2011 | Added : அக் 06, 2011 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதிட தனக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் அவரது வக்கீல் தாக்கல் செய்துள்ள மனுவில்; ராஜா சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி அவர் தன்நிலையை விளக்க விரும்புகிறார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கிறது என்ற
Raja to help counsel in 2G case in Supreme Courtசுப்ரீம்கோர்ட்டில் வாதிட போகிறார் ராஜா - ஆவணங்கள் பல இவர் கைகளால் எழுதியது

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதிட தனக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் அவரது வக்கீல் தாக்கல் செய்துள்ள மனுவில்; ராஜா சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி அவர் தன்நிலையை விளக்க விரும்புகிறார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கிறது என்ற விவரத்தை எனது கட்சிக்காரர் அறிந்து கொள்ள முடியும். இதனால் அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ஓ.பி., சைனி கூறினார்.

இந்த மனுத்தாக்கல் செய்துள்ளது குறித்து அவரது வக்கீல் சுசீல்குமார் கூறுகையில்; ராஜா சுப்ரீம் கோர்ட்டுக்கு வருவதால் வழக்கு விசாரணைக்கு பெரும் உதவியாக இருக்கும். வழக்கில் உள்ள தன்மைகளை அவரே விளக்கும் போது மிக பயனுள்ளதாக அமையும். மேலும் பல முக்கிய ஆவணங்கள் கையெழுத்துக்களால் உள்ளன. இதில் ராஜாவின் கையெழுத்துள்ள ஆவணங்கள் அதிகம் இருப்பதால் இவரே வரும் போது எளிதில் படித்து சொல்ல வசதியாக இருக்கும். டெக்னிக் விஷயங்களையும் அவர் சொல்லித்தருவார் என்றும் கூறியுள்ளார்.


ஜாமின் எப்போது கிடைக்கும் ? கடந்த வாரம் அவர் சார்பில் தாக்கலான ஜாமின் மனு வரும் 17 ம்தேதி விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் இவர் மீதான விசாரணை முடிந்து விட்டதா இல்லையா என்பது இன்னும் தெரியாமல் இருப்பதால் இந்த வழக்கில் சட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதாக வக்கீல்கள் கூறுகின்றனர். விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் முடிந்து விட்டால் இந்த வழக்கில் தொடர்பானவர்களுக்கு ஜாமின் கிடைக்கும். ஆனால் இதில் உறுதியான தகவல் எதுவும் சி.பி.ஐ., தரப்பில் இல்லை என வக்கீல்கள் குறைபடுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுலைமான் - தோஹா ,கத்தார்
06-அக்-201118:29:10 IST Report Abuse
சுலைமான் ராஜா GO AHEAD . நீங்கள் விடுதலை ஆவதற்கான காலம் நெருங்கி விட்டது. உங்களை பகடையாக்கி சதி வலையில் மாட்டி விட்டவர்கள்தான் பலியாகப்போகிறார்கள். தூள் கிளப்புங்கள். தடைகளை உடைத்தெறியுங்கள்.
Rate this:
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
06-அக்-201118:13:42 IST Report Abuse
saravanan வா ராசா வா, வந்து....... யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தே?, உன் தலைவனுக்கு எவ்வளவு போச்சு?, அவ்வளவு கொடுத்த பின்னும் உன்னை கொஞ்சம் கூட கண்டுக்காம தன் மகளை மட்டும் வெளிய எடுக்க துடிக்கறதின் மர்மம் என்ன?, நம்ம காரைக்குடியின் பேரைக் கெடுத்தவர் எவ்வளவு அமுக்கினார்?, பஞ்சாப் தலையாட்டி பொம்மை கமுக்கமா இருக்கரதின் மர்மம் என்ன?,அவரோட தல இத்தாலி எவ்வளவு ஆட்டைய போட்டிச்சி? எல்லாத்தையும் அவுத்து விடு ராசா.
Rate this:
Cancel
s.maria alphonse pandian - mettur,இந்தியா
06-அக்-201116:36:35 IST Report Abuse
s.maria alphonse pandian ராசாவின் கருத்துக்கள் ஆரம்பத்திலிருந்தே ஆணித்தரமாகவும் , ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலும் உள்ளன...அவரின் வாதங்கள் பாராட்டுக்குரியந ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X