சதுப்பு நிலங்களில், நீர்நிலைகளில் வாழும் முதலைகளின் நோயெதிர்ப்பு சக்தி, தீங்கு விளைவிக்கும் பூஞ்சை தொற்றில் இருந்து மனிதர்களை பாதுகாக்க உதவுமென நேச்சர் கம்யூனிகேஷன் நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் நேச்சர் கம்யூனிகேஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:-
உப்பு நீர் முதலைகளில் காணப்படும் டிஃபென்சின்கள் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு புரதங்களை ஆராய்ந்ததில், இந்த புரதங்கள் முதலைகளின் தொற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பின் முதல் வரிசையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்த ஆன்டிபயாடிக் புரதங்கள் , பூஞ்சைகளால் அச்சுறுத்தல் வளரும்போது, புதிய மற்றும் பயனுள்ள சிகிச்சைகளுக்கு மனிதர்களுக்கு உதவும்.
டிஃபென்சின்கள் என்றால் என்ன?
டிஃபென்சின்கள் அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளால் உற்பத்தி செய்யப்படும் சிறிய புரதங்கள். தாவரங்களில், டிஃபென்சின்கள்
பொதுவாக பூக்கள் மற்றும் இலைகளில் உருவாகின்றன. அதேசமயம் விலங்குகளில் நுரையீரல் மற்றும் குடலில் உருவாகின்றன. தொற்று உயிரினங்களைக் கொல்வதன் மூலம் சார்ந்திருக்கும் உயிரினத்தை காப்பதே அவற்றின் பங்கு ஆகும்.
![]()
|
முதலை டிஃபென்சின்களின் சிறப்பு என்ன?
அசுத்தமான நீரில் வாழ்ந்தாலும், முதலைகள் வேட்டையாடும்போதும், இடத்திற்காக சண்டையிடும்போதும் அடிக்கடி காயமடைகின்றன என்றாலும், அவை அரிதாகவே
தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. முதலைகளுக்கு சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை இது காட்டுகிறது.
இந்தக் கடுமையான சூழல்களில் அவற்றைப் பாதுகாக்க, காலப்போக்கில் அவற்றின் டிஃபென்சின்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டன என்பதை புரிந்துகொள்ள விரும்பினோம்.
உப்புநீர் முதலையின் மரபணுவைத் தேடுவதன் மூலம், சி.பி.ஓ.பி.டி 13 என பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட டிஃபென்சினை கண்டறிந்தோம். ஏனென்றால், சி.பி.ஓ.பி.டி 13 சுற்றியுள்ள சூழலின் pH அடிப்படையில் அதன் செயல்பாட்டை சுயமாக கட்டுப்படுத்த முடியும்.
உதாரணமாக, இரத்தத்தில் டிஃபென்சின் செயலற்றது. இருப்பினும், குறைந்த, அமிலத்தன்மை கொண்ட pH உள்ள நோய்த்தொற்றின் தளத்தை அடையும் போது, டிஃபென்சின் செயல்படுத்தப்படுகிறது .இது தொற்றுநோயை அழிக்க உதவும். ஒரு டிஃபென்சினில் இந்த வழிமுறை காணப்படுவது இதுவே முதல் முறையாகும். எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி எனப்படும் செயல்முறையைப் பயன்படுத்தி சி.பி.ஓ.பி.டி 13-ன் கட்டமைப்பை வெளிப்படுத்துவதன் மூலம் எங்கள் குழு இதனை கண்டுபிடித்தது.
பூஞ்சை உண்மையில் அச்சுறுத்தலாக உள்ளதா?
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுடன் ஒப்பிடுகையில், பூஞ்சை தொற்றுகள் பெரும்பாலும் தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மனித குல வரலாற்றில், பாக்டீரியா, வைரஸால் மட்டுமே தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளன.
![]()
|
உண்மையில், பூஞ்சைகள் பொதுவாக விளையாட்டு வீரர்களின் கால் மற்றும் கால் விரல் நகம் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதை அறிந்திருக்கலாம். அரிதாகவே உயிருக்கு ஆபத்தான நிலைமையை ஏற்படுத்த கூடும்.
ஆனால் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, பூஞ்சைகள் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உலகம் முழுவதும் சராசரியாக 15 லட்சம் பேர், பூஞ்சை பாதிப்பால் உயிரிழக்கின்றனர்.
தற்போது, புரத அடிப்படையிலான சிகிச்சைகள் சில நேரங்களில், ஒருவரின் ஆரோக்கியமான செல்களுக்கு தீங்கு விளைவிக்கும். முதலையின் டிஃபென்சின்கள் பற்றிய ஆய்வை பயன்படுத்துவதன் மூலம் சி.பி.ஓ.பி.டி 13 -ன் pH திறனை பெறுவதற்கும், நாம் மற்ற எதிர்ப்பு புரதங்களை உருவாக்க முடியும்.
தொற்றுநோய் பாதிப்பின் போது மட்டுமே இது குறித்து கவனம் செலுத்துவோம். முதலையின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் தனித்துவமான முதன்மை சக்தியை நிச்சயம் எதிர்காலத்தில் ஒருநாள் பயன்படுத்துவோம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.