திருநெல்வேலி:மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை திருப்பி அனுப்பியதால், பா.ஜ.,வின் திருநெல்வேலி மாவட்ட பட்டியல் அணியினர் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் நுாதன போராட்டம் நடத்தினர்.
பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 1997-98ல் 594.53 கோடி, 1998-99ல் 509.60 கோடி, 1999-2000ல் 169.07 கோடி ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பா.ஜ., ஆதாரபூர்வமாக புகார் கூறியுள்ளது.
கடந்த 2021 - 22ம் ஆண்டில் 2,418கோடி, 2022-23ம் ஆண்டில் 16,442 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியதில் 10,446 கோடி ரூபாய் செலவு செய்யவில்லை. இதனால் பட்டியலின சமுதாய மக்கள் இலவச மனைப் பட்டா, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு நிதியை செலவழிக்காமல் திருப்பி அனுப்பும் தமிழக அரசை கண்டித்து, திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம், பா.ஜ., பட்டியலின அணி மாவட்ட தலைவர் துளசிபாலா தலைமையில் பா.ஜ., மாவட்ட பொதுச் செயலர் முத்துபலவேசம்.
பட்டியல் அணி பொது செயலர்கள் தமிழரசன், தங்கராஜ், நிர்வாகிகள் சிவந்தி நாராயணன், ராமசாமி, சுப்புலட்சுமி உட்பட பலர் மனு அளித்தனர்.