ப.சிதம்பரத்திற்கு திருக்கடையூர் கோயிலில் அறுபதாம் ஆண்டு நிறைவு கொண்டாடப் பட்ட போது குட நீரில் முழுகுவதற்கு சம்மதிக்கவில்லை. அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் முக்கியமே அதுதான். தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டார். கடவுளின் முன்னர் கூட தன்னைக் கம்பீரமாகக் காட்டிக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே.
திடீரென்று தேக்கடிக்கு சுற்றுப் பயணம் குடும்பத்தோடு மேற்கொள்கின்றார் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதுதான் தெரிகின்றது குச்சானூர் சனீஸ்வரன் கோயிலில் சனீஸ்வரனின் வாகனமான காகத்தைத் தலையில் சுமந்து கொண்டு பிரகாரம் சுற்றியிருக்கின்றார் .2 ஜி. எல்லோரையும் படுத்துவது புரிகின்றது.
எனது வாழ்க்கையிலேயே முதன் முதலாக கருணாநிதிக்கு நன்றி சொல்லுகின்றேன். ஆமாம் காங்கிரசைக் கழற்றி விட்டதறகாகத் தான் .தமிழகத்து மக்களோடு தொடர்பே இல்லாமல் தங்களை டில்லியில் பெரிய தலைவர்களாகக் காட்டிக் கொள்கின்ற தலைவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு டில்லித் தலைவர்கள் முன் அம்மணமாகத் தெரிவதற்கு வழி வகுத்த கருணாநிதிக்கு மிக்க நன்றி.
- நெல்லைகண்ணன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE