காஞ்சிபுரம்:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடக்கிறது.
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் கவனத்திற்கு என, அரசு தேர்வுகள் இயக்ககம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் காஞ்சிபுரம் தேர்வு மையங்களில், ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களின் கவனத்திற்கு, தேர்வு அறையில் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படுவார்கள்.
தேர்வு அறையில் துண்டுத்தாள், மொபைல் போன் முதலியன வைத்தருத்தல், வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால், ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.
அல்லது நிரந்தமாக படிக்கத்தடை, மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும்.
இதன் காரணமாக எதிர்காலமே பாதிக்கப்படலாம். எனவே, மாணவர்கள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.