ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே மண்ணுார் காட்டு கூட்ரோடு அருகே அரக்கோணத்தில் இருந்து வந்த ஸைலோ கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பலமாக மோதியது.
இதில் ஆட்டோ எதிரே அரக்கோணம் நோக்கி சென்ற காரின் மீது மோதியது. இதன் பின்னால் வந்த டாடா ஏசி மினி வேன் கார் மீது மோதி அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது.
இதில் ஆட்டோ நொறுங்கியதில் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், 40, பலத்த காயம் அடைந்தார். மேலும் ஸைலோ மற்றும் காரில் வந்தவர்கள் என 5 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.