அன்னுார்:தோட்டத்து வீட்டில் பூட்டை உடைத்து, நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குப்பேபாளையம் அருகே செங்காளிபாளையம், தென்னந் தோட்டத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம், 53. விவசாயி. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார். மகன் கல்லூரிக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டின் முன்புற கதவு பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த மூன்று சவரன் நகை, 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 'லேப் டாப்' ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
சம்பவ இடத்தில் மேட்டுப்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி., பாலாஜி விசாரணை நடத்தினார். இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.