அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு, சில ஆண்டுகளுக்கு முன், குடிநீர் 'மினி டேங்க்' அமைக்கப்பட்டது. தற்போது, அது பழுதானதால் பயன்பாடு இன்றி உள்ளது.
பேருந்து நிழற்குடை அருகே உள்ளதால், பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பள்ளி மாணவர்கள், பயணியர் அருகில் உள்ள கடைகளில், விலை கொடுத்து தண்ணீர் பாட்டீல் வாங்கி அருந்தும் நிலை உள்ளது.
எனவே, எதிர்வரும் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.