அமைந்தகரை:பால் வியாபாரியை 'பீர் பாட்டிலால்' தாக்கியவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சென்னை அமைந்தகரை, வெள்ளி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; பால் வியாபாரி.
இவரது வீட்டு வாசலில், கடந்த 12ம் தேதி, ஷெனாய் நகரைச் சேர்ந்த நவீன்ராஜ், 22, என்பவர், இருசக்கர வாகனத்தை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி உள்ளார்.
இதனால், இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன்ராஜ், மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து, ராஜேந்திரனை தாக்கிவிட்டு தப்பினார்.
இதில் காயமடைந்த ராஜேந்திரனை, அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து, நவீன்ராஜை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.