உடுமலை;உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், அறிவியல் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துசெல்லப்படுகின்றனர்.
பள்ளி மாணவர்களின், பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில், அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவிழா பிப்., மாதம் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
இந்த அறிவியல் திருவிழாவில், மாணவர்களுக்கு திறனறிப்போட்டிகள், கண்காட்சி நடந்தன. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும், இன்று (15ம் தேதி) திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு ஒருநாள் சுற்றுலாவாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை, கலிலியோ அறிவியல் கழகம் செய்துள்ளது. இதன் வாயிலாக, போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.