அறிவியல் ஆயிரம்
மாற்று எரிபொருள்
சமீபத்தில் 15 சதவீதம் மெத்தனால் கலந்த டீசலுடன் இயங்கும் இந்தியாவின் முதல் பஸ் போக்குவரத்து கர்நாடகாவில் சோதனை முறையில் தொடங்கப்பட்டது. எரிபொருள் செலவு, காற்றுமாசை குறைப்பதே இதன் நோக்கம். மெத்தனால் ஒரு பசுமை எரிபொருள். மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையம், இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் கலந்த எரிபொருள். இது மெத்தில் ஆல்கஹால் எனவும் அழைக்கப்படுகிறது. ஆவியாகக்கூடிய எளிதில் தீப்பற்றக்கூடியது. நிறமற்றது.
தகவல் சுரங்கம்
தேசிய தடுப்பூசி தினம்
காசநோய், போலியோ, அம்மை, கொரோனா உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பூசியால் வெல்ல முடிந்தது. இந்தியாவில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாட்டில் 1995 மார்ச் 16ல் முதன்முறையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்துதல், தடுப்பூசியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யும் சுகாதார ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் மார்ச் 16ல் தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது.