கோயம்பேடு, அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இவாஞ்சலின், 23; மென்பொருள் பொறியாளர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் அஜய் என்பவருடன், இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து அரும்பாக்கம் நோக்கி சென்றார்.
அப்போது, அந்த வழியாக அறுந்து வந்த மாஞ்சா நுால் இருவரின் கழுத்திலும் சிக்கி அறுத்தது. இதில் நிலை தடுமாறிய இவாஞ்சலின், அஜய் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில், இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
சம்பவம் குறித்து, கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில் கோயம்பேடைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், எச்சரித்து ஜாமினில் அனுப்பினர். மாஞ்சா நுால் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.