சேலையூர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார், 22. சேலையூரை அடுத்த வேங்கைவாசலில் தங்கி, கட்டட பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கீழ்த்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்திருந்த தண்ணீரில் கால் வைத்த சந்தன்குமார், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். சக ஊழியர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சந்தன்குமார் இறந்தது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.