புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சுதிப்தோ கங்குலி (44) என்ற மென்பொறியாளர், மனைவி பிரியங்கா மற்றும் மகன் தனிஷ்கா(8) ஆகியோரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூருவில் வசிக்கும் அவரது சகோதரர், பல முறை அழைத்தும் கங்குலி மொபைல்போனை எடுக்கவில்லை. நண்பர் ஒருவரை அனுப்பி பார்த்த போது அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. 3 பேரின் சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement