'பெங்களூரில் பெரும் பணக்காரர்கள் கூட செருப்பு அணிந்து செல்கின்றனர். ஆனால் மும்பையில் நீங்கள் இதை பார்க்கவே முடியாது' என ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை தரகு நிறுவனமான ஜீரோதா இணை நிறுவனரும், சி.இ.ஓ.,வுமான நிகில் காமத், ஐ.ஐ.எஃப்.எல் வெளியிட்டுள்ள சுயமாக உருவாகிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர். சுமார் ரூ.17,500 கோடி நிகர சொத்துமதிப்பு கொண்ட இவர், பதின்ம வயதில் மாதம் ரூ.8 ஆயிரம் சம்பளத்தில், கால் சென்டர் வேலையில் இருந்து தனது பயணத்தை துவங்கியவர். தன் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையில், அவரது தந்தை ஒட்டுமொத்த சேமிப்பை அளிக்கவே, பங்குச்சந்தையில் முதலீடு செய்து ஓராண்டுக்கு பின்னர், முழு நேரமாக பங்குச்சந்தையில் நுழைந்து தற்போது பில்லியனராக மாறியுள்ளார்.
டிஜிட்டல் இதழ் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நிகில் காமத் கூறியிருப்பதாவது:-
'பெங்களூரு மக்கள் குறைந்த போட்டி மனப்பான்மை உள்ளவர்கள். 'போட்டி குறைவாக இருப்பது ஒரு மோசமான விஷயம்' என்று மக்கள் நினைக்கலாம் ஆனால் அது உண்மையில் "சிறந்த விஷயம்". மற்ற நகரங்களைப் போல பெங்களூரு மக்கள் மற்றவர்களின் முதுகில் சவாரி செய்ய விரும்புவதில்லை. தென் இந்தியர் என்பதால், பயமுறுத்தி வளர்த்ததால் கூட இவ்வாறு இருக்கலாம்.
![]()
|
பெங்களூரில் பெரும் பணக்காரர்கள் கூட செப்பல் அணிந்து செல்கின்றனர். ஆனால் மும்பையில் நீங்கள் இதை பார்க்கவே முடியாது. மும்பை, டில்லியை விட பெங்களூரு தான் என் சாய்ஸ். ஏனெனில், இங்குள்ள பணக்காரர்கள் ஆடம்பரத்தை காட்டுவதில்லை.'
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement