Science some tax news | அறிவியல் சில வரிச் செய்திகள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அறிவியல் சில வரிச் செய்திகள்

Added : மார் 16, 2023 | |
குதிரையின் மின்சார வரிகள்இருவேறு வெப்பநிலைகொண்ட ஒருவெங்காய அட்டைப் பெட்டிஒரே முறை பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழலுக்கு கேடு. வெங்காயத் தோலால் ஆன ஒரு பொருள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வந்துள்ளது. பிரிட்டனிலுள்ள 'ஹுயிட்' என்ற நிறுவனம், வெங்காயத் தோலை அரைத்து, அதனுடன் கேசின் என்ற வேதிப் பொருளை கலந்து 'ஹுயிட்' என்ற பொருளை
Science some tax news  அறிவியல் சில வரிச் செய்திகள்


குதிரையின் மின்சார வரிகள்


இருவேறு வெப்பநிலைகொண்ட ஒருவெங்காய அட்டைப் பெட்டி
ஒரே முறை பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழலுக்கு கேடு. வெங்காயத் தோலால் ஆன ஒரு பொருள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வந்துள்ளது. பிரிட்டனிலுள்ள 'ஹுயிட்' என்ற நிறுவனம், வெங்காயத் தோலை அரைத்து, அதனுடன் கேசின் என்ற வேதிப் பொருளை கலந்து 'ஹுயிட்' என்ற பொருளை உருவாக்கியுள்ளது. இது கிருமிகளை எதிர்க்கும். ஆக்சிஜனேற்றத்தை தடுக்கும். உணவுப் பொருட்களை பாதுகாக்கும் அட்டைப் பெட்டிகளுக்கு ஹுயிட் பயன்படும்.


ஈரம் உணர்த்தும் நுட்பம்


மண்ணில் ஈரப்பதத்தை அறிந்து, பயிருக்கு நீர் விடவேண்டும் என்பதை விவசாயிக்கு தெரிவிக்கும் ஒரு நுட்பத்தை சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உலோக- கரிமக் கலவையால் ஆன ஒரு படலத்தை ஒரு முனையில் வைத்து, அதில் நீர் உணரிகளை இணைத்து, குச்சியைப் போல தரையில் நட வேண்டும். அவை அந்த ஈரப்பதத்தை அளந்து தெரிவிக்க, தேவையான நீரை பாசனத்திற்கு விட்டால் போதும்.


பூச்சி மூளையின் வரைபடம்


சாதாரண ஈக்களின் மூளை ஒரு மணல் துகள் அளவே இருக்கும். ஆனால், மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டது. ஈ மூளை அமைப்பின் முழுமையான வரைபடத்தை, கேம்பிரிட்ஜ் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். மூளை அணுக்களான 3,016 நியூரான்களையும், அவற்றுக்கிடையேயான 5.48 லட்சம் தொடர்பு இணைப்புகளையும் துல்லியமாக அந்த வரைபடம் காட்டுகிறது. இந்த ஆராய்ச்சியால், மனித ஆழ்மனம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை பல அறிவியல் துறைகள் பலனடையப் போகின்றன.


குதிரையின் மின்சார வரிகள்


இருவேறு வெப்பநிலைகொண்ட ஒரு பொருளில் மின் உற்பத்தி ஏற்படும். இந்த கொள்கையையும் வரிக்குதிரையின் வெள்ளை, கறுப்பு வரிகளையும் பயன்படுத்தி தென்கொரியாவிலுள்ள ஜி.ஐ.எஸ்.டி., ஆராய்ச்சி நிலையம், ஒரு வெப்ப மின் உற்பத்தி கருவியை உருவாக்கியுள்ளது. வெள்ளைக் கோடுகளின் கீழே சற்று குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், கறுப்பு வரிகளினடியில் சூடாக இருக்கும். இந்த இரு வெப்ப மாறுபாட்டால், லேசான மின் உற்பத்தி உண்டாகும். இந்தக் கருவியை உடையாக அணிந்தால், சிறிய கருவிகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.


கொழுப்பைக் குறைக்க மாத்திரை


இரண்டாவது மனித சோதனைக் கட்டத்தில் இருக்கும் ஒரு மருந்தை உட்கொண்டால், உடலிலிருக்கும் 'கெட்ட' கொழுப்பைக் குறைக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஈரல் எளிதில் அவற்றை சீரணிக்கும் வகையில் கெட்ட கொழுப்பை சிதைத்துத் தரக்கூடிய 'பி.சி.எஸ்.கே.,9 என்ற அந்த மருந்து, மாத்திரை வடிவில் இருக்கிறது. இதை எட்டு வாரங்கள் உட்கொண்டோருக்கு 60 சதவீதம் வரை கொழுப்பை குறைக்கிறது. இது குறித்து, 'ஜர்னல் ஆப் தி அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி' இதழில் தகவல் வெளியாகியுள்ளது. பொருளில் மின் உற்பத்தி ஏற்படும். இந்த கொள்கையையும் வரிக்குதிரையின் வெள்ளை, கறுப்பு வரிகளையும் பயன்படுத்தி தென்கொரியாவிலுள்ள ஜி.ஐ.எஸ்.டி., ஆராய்ச்சி நிலையம், ஒரு வெப்ப மின் உற்பத்தி கருவியை உருவாக்கியுள்ளது. வெள்ளைக் கோடுகளின் கீழே சற்று குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், கறுப்பு வரிகளினடியில் சூடாக இருக்கும். இந்த இரு வெப்ப மாறுபாட்டால், லேசான மின் உற்பத்தி உண்டாகும். இந்தக் கருவியை உடையாக அணிந்தால், சிறிய கருவிகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X