முடிச்சுகள் சிக்கல்களை குறித்தாலும், பொருள் அறிவியலாளர்கள் வேறு மாதிரி பார்க்கின்றனர். முடிச்சுகள் சில சமயம் பலத்தை தருபவை என்பது அவர்களது ஆய்வு முடிவு. அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பாலிமர்களால் ஆன ஒரு புதிய கலவைப் பொருளை உருவாக்கினர். அதன் பலத்தை கூட்டுவதற்காக, முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து, 70 மைக்ரோ மீட்டர் அளவுக்கு துளித்துளி முடிச்சுகள் உள்ள பட்டையாக அதை அச்சிட்டனர்.
பின் சாதாரண பட்டை போலவும் அச்சிட்டனர். இரண்டையும் பலப்பரீட்சைக்கு உட்படுத்தியபோது, நுண் முடிச்சுகள் கொண்ட பாலிமர் பட்டை தான் இரு மடங்கு பலம் கொண்டதாக இருந்தது.
வேறு புதிய பொருட்களை கலக்காமல், முடிச்சுகள் மூலமே ஒரு பொருளின் பலத்தை கூட்ட முடிவது பல தொழில்நுட்ப பயன்களை தரக்கூடும்.