வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: சந்திரயான் - 3 விண்கலத்தின் ஒலியியல், அதிர்வு சோதனைகள் வெற்றிகரமாக நடந்தது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில், நிலவுக்கு வரும் ஜூன் மாதத்தில், சந்திரயான் - 3 விண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும், 'லேண்டர்' சாதனத்தின் சோதனை சமீபத்தில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து இன்ஜின் திறன் குறித்த சோதனை நடந்தது.

இந்நிலையில் இன்று(மார்ச் 16) நடந்த சந்திரயான் - 3 விண்கலத்தின் ஒலியியல், அதிர்வு சோதனைகள் வெற்றிகரமாக நடந்துள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரோ நிறுவனம் கூறுகையில், சந்திரயான்-3 விண்கலத்தை ஜூன் இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
சந்திரயான் - 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருகிறது எனக் கூறியது.