வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பரிசோதனை, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உடனடியாக இதனை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மார்ச் 8 ம் தேதி வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.