சென்னை:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான துபாயில் இருந்து, 'ஏர் - இந்தியா' விமானம், நேற்று முன்தினம் சென்னை வந்தது. அந்த விமானத்தின் பின்பக்க கழிப்பறையில், கறுப்பு நிற 'டேப்' சுற்றப்பட்டு, ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது, சுத்தம் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு விமான நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த பொட்டலத்தை கைப்பற்றி, சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்து போது, 60.67 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,240 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தி வந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
Advertisement